ஒரு ராகம் தராத வீணை
நல்லக் காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வீணை
ராகம் வந்தாடும் வீணை
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
நதியின் வேகம் பருவ மோகம்
கடலைச் சேர மாறிப் போகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம்
இதழில் ஆறும் இனிமை ஆகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் நெஞ்சினில்
இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
ராகம் வந்தாடும் வீணை
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை
நல்லக் காதல் சொல்லாத பெண்மை
இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில்
இருக்கும் தேனை எடுக்கும் போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையில் ஓரம் மலர்ந்த பூவை
பறிக்கும் வேடன் இருக்கும் போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத் தானய்யா
அட மனதில் சாரல் அடித்தா
கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ராகம் வந்தாடும் வீணை
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை
நல்லக் காதல் கொண்டாடும் பெண்மை
No comments:
Post a Comment