காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே , ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண்ணவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்
மலை காட்டறாய் தலை கொதி நித்திரை தருவேன்
காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
கால மாற்றம் நேரும் பொது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன் -உன்
ஆண்மை நிறையும் பொது உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீல என்னுயிர் தருவேன்
காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே , ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
No comments:
Post a Comment