Thursday, 10 April 2014

செம்மீனே செம்மீனே ____SEVVANTHI




செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலைக் கொண்டு வாறன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா னா
தானன தனனானா ..

செம்மீனே செம்மீனே ....

கால் கடுக்க காத்திருந்தேன் 
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே 
காரணத்தை நான் அறியேன் 
தினசரி நான் பார்த்த தாமரப் பூவும் 
திருமுகம் காட்டாது போனது என் பாவம் 
ஊர் தடுத்தும் யார் தடுத்தும் 
ஓயாது நானும் கொண்ட மோகம் 
என்றும் நானும் கொண்ட மோகம் 

செம்மீனே செம்மீனே ...

நான் வழங்கும் பூ முடிக்க 
கூந்தல் ஒண்ணு ஆடுதிங்கே
என் விரலால் போட்டு வைக்க
நெற்றி ஒண்ணு வாடுதிங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீர் இன்றி வாடும் இள நாத்து
ஓடை நீர் இன்றி வாடும் இள நாத்து

செமீனே செம்மீனே ....

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates