Thursday, 10 April 2014

கொலுசே கொலுசே____PEN PUTHI PIN PUTHI




கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேலாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆகா மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் 
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே ....

ஊருக்கு மேற்க ஊருணியோரம் ஒத்தை பனை இருக்கு
ஊர் சத்தம் கொறஞ்சிருக்கு
இந்த செவ்வந்தி பூவும் தாமரையாக
நேரம் பொறந்திருக்கு
ஏழெட்டு மாதம் ஆயிருக்கு
வரும் சித்திர மாசம் வெத்தல போட
யோகம் பொறந்திருக்கு
அடி எப்போதும் சிக்காத சேலைக்கு இப்போது
சோதனை வந்திருக்கு

கொலுசே கொலுசே ....

ஆத்துல குளிச்சு ஆறடி கூந்தல் அள்ளி முடிஞ்சவளே
பூ கிள்ளி முடிஞ்சவளே
அந்த ஆறடி கூந்தல் ஏனடி மன்மதன்
வந்து ஒளிந்து கொள்ள
நான் மஞ்சம் வரைந்து கொள்ள
ஒரு வேட்டியை வீசி விண்மீனைப் பிடித்த
விந்தையை என்ன சொல்ல 
நான் என்னென்று உறைக்க எப்படி மறைக்க 
பூவுக்கு பூட்டு இல்ல 

கொலுசே கொலுசே ம்ம்ம்ம்ம்
எச பாடு கொலுசே ம்ம்ம்
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே 
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
நீ கேலாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
ஆகா மொத்தத்தில் நீ தந்த சத்தத்தில் 
தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே

கொலுசே கொலுசே ம்ம்ம்
எச பாடு கொலுசே ம்ம்ம்
கொலுசே கொலுசே 
எச பாடு கொலுசே 

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates