Thursday, 3 April 2014

சின்னச் சின்ன வண்ணக்குயில் _mouna raagam

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்..

மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்..

சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்..

என்னமோ ஆசைகள்.. நெஞ்சத்தின் ஓசைகள்..

மாலை சூடி.. மஞ்சம் தேடி.. (2)

காதல் தேவன் சந்நிதி.. காண... காணக் காண..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்;..

மங்கைக்குள் காதல் வந்து.. கங்கை போல் ஓடக் கண்டேன்..

இன்பத்தின் எல்லையோ.. இல்லையே இல்லையே..

அந்தியும் வந்ததால்.. தொல்லையே.. தொல்லையே..

காலம் தோறும்.. கேட்க வேண்டும் (2)

பருவம் என்னும் கீர்த்தனம் பாட.. பாடப்பாட..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)

பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக்; கூவுதம்மா..(2)

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates