Saturday, 12 April 2014

ரோஜா…ரோஜா…______Kadhalar Dinam




ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் – அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா…ரோஜா…ரோஜா…ரோஜா…
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

ரோஜா…ரோஜா…ரோஜா…
—-
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா…ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா…ரோஜா…


Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates