Wednesday, 26 March 2014

ஹோ... செங்காடே_____Paradesi




ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல
சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே

போட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பெத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

வேளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு
வெளந்திய வெயிலில் ஜனம் வெளியேருதே ஓ...
வாழ்வேடு கெண்டுவிடுமே சாவேடு கொண்டுவிடுமே
போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலம் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது
(போட்ட கல்லியும்)

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல
சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
(போட்ட கல்லியும்)

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates