Thursday, 20 March 2014

வான் எங்கும் நீ மின்ன மின்ன_ENDRENDRUM PUNNAGAI



வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய் 
கை அள்ளியே வெண் விண்ணிலே 
ஏன் வண்ணம் மாற்றினாய் 

வான் எங்கும் நீ மின்ன மின்ன 
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய் 
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய் 

ஓ ஓ ப்ரியா ப்ரியா 
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை 
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை 
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன ....

பாலை ஒன்றை வரைந்திருந்தேன் 
நீ காதல் நதியென வந்தாய் 
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை 
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வானெங்கும் நீ மின்ன ....

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates