Thursday, 20 March 2014

நிலா நீ வானம் காற்று


நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல் நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
தேவதை  அன்னம்  பட்டாம்பூச்சி
கொஞ்சும்  தமிழ்  குழந்தை
சினுங்கள்  சிரிப்பு  முத்தம்
மௌனம்  கனவு  ஏக்கம்
மேகம்  மின்னல்  ஓவியம்
செல்லம்  ப்ரியம்  இம்சை
இதில்  யாவுமே  நீதான்  எனினும்
உயிர்  என்றே  உனை  சொல்வேனே
நான்  உன்னிடம்  உயிர்  நீ  என்னிடம்
நாம்  என்பதே  இனிமேல்  மெய்  சுகம்
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
அன்புள்ள ஒளியே  அன்புள்ள  தமிழே
அன்புள்ள  செய்யுளே  அன்புள்ள  இலக்கணமே
அன்புள்ள  திருக்குறளே  அன்புள்ள  நற்றினையே
அன்புள்ள  படவா  அன்புள்ள  திருடா
அன்புள்ள  ரசிகா அன்புள்ள  கிருக்கா
அன்புள்ள  திமிரே அன்புள்ள  தவறே
அன்புள்ள  உயிரே  அன்புள்ள  அன்பே
இதில்  யாவுமே  இங்கு  நீதான்  என்றால்
என்னதான் சொல்ல சொல்  நீயே
பேரன்பிலே ஒன்று  நாம்  சேர்ந்திட
வீண் வார்த்தைகள்  இனி  ஏன்  தேடிட
(ஆண்)
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates