ஆகாய மேகங்கள் பொழியும் பொது
ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது
ஹே வீரனே கர்ம வீரனே கடமை வீரனே
தொல்விகலில் துவண்டு விடாதே
வெற்றிகலில் வெறி கொள்ளாதே
கல்லடி கல்லடி படும் என்பதாலே
மரம் காய்க்காமல் போவதில்லை
சொல்லடி சொல்லடி படும் என்பதாலே
வெற்றி காணாமல் போவதில்லை
மாலைகளை கண்டு மயங்காதே
மலைகலை கண்டு கலங்காதே
காற்றே காற்றே நீ துன்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ
ஓடிகொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா
பாடிகொண்டே இரு
கோழை மகன் மன்னித்தால்
அது பெரிதல்ல பெரிதல்ல
வீர மகன் மன்னித்தால்
அது வரலாறு வரலாறு
பொன்னும் மண்ணும்
வென்று முடிப்பவன்
கடமை வீரனே
அந்த பொன்னை ஒரு நாள்
மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே
No comments:
Post a Comment